1960 ! தடாலடியாகப் பெண் எழுத்தாளர்கள் பத்திரிகை
உலகில் கை "பதித்த காலம்...
பெண்ணியத்தை ஒருசேர இழைத்து, ஆண் அடக்குமுறையை ஒட்டுமொத்தமாய் பழித்து" 16 வயது பெண் எழுத்தாளராய் தடம் பதித்தவர் அம்பை " ( சி. எஸ். லஷ்மி )
[ பீஷ்மரை அடிமை எனக்கூறி சிகண்டியாய் உருமாறி குருஷேத்ர போரில் பிதாமகனாரையே வென்றவன் அல்லவா அம்பை ...]
பிளாஸ்டிக் டப்பியில் பராசக்தி ( The plastic god box ) சிறுகதையில் தான் அம்பை அறிமுகமானார். கதை முழுதும் பெண்மை நெடி .....
இச்சிறுகதை தான் " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ", " வற்றும் ஏரியில் மீன்கள் ", "சிறகுகள் முறியும் ", "கறுப்புக் குதிரைச் சதுக்கம் "கதைகளை தேடிச்சென்று வாசிக்க வைத்தது ." The face behind the mask of women in Tamil Literature and society and women writers " என்னும் ஆராய்ச்சி நூல் இறுதிக்கட்ட வாசிப்பில் உள்ளது .
" சிறகுகள் முறியும் " கதையில் தன் வாழ்வை விதி என ஏற்று வெறுமையில் வாழ்ந்து பழகும் சாயாவையும், " கருப்புக் குதிரைச் சதுக்கம் " கதையில் தனக்கு நேர்ந்ததை எதிர்த்து ' நின்று ' போராடும் ரோஸாவையும் அன்றைய பத்திரிகை உலகம் ஏற்கவில்லை !'
வணிகத்திற்கும் இலக்கியத்திற்கும் பாலம் அமைத்து மிடுக்காய் பயணம் செய்யும் மற்ற எழுத்தாளர்கள் போல அம்பை இல்லை ' என்று விமர்சிக்கப்பட்டார் .
அம்பையின் ஆங்கில கட்டுரைகள் சில தமிழில் வெளிவந்துள்ளது அதை வாசிக்கிறேன் என்று வாசிப்பு தோழமை கூற , மொழிபெயர்ப்பாளர் யாரெனக்கேட்ட போது திருமதி.அருள்மொழி நங்கை என்ற பதில் !
அவர் யாரெனத் தேடிய போதுதான் அம்பை அவர்களை அயராது விமர்சித்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மனைவி என்று அறிந்தோம் ...
சினிமா பார்க்கும் திருப்தியிலும் பண்டிகை கொண்டாடும் பக்தியிலும் வாழ்வினை ஒடுக்கும் பெண்களு ம் ,
சிலி நாடு அகதியும் திருநெல்வேலியின் நிர்க் கதியும் ,
பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தை கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மாவும் ,
யுகம் யுகமாய் சிகரெட்டுக்கு கடன்கொடுக்கும் டீக்கடை நாயர் வரை அனைத்தும் சோடை போகாத கதாபாத்திரங்கள்.
அம்பையின் எழுத்தை வாசித்த பலர் அவரின் சொற்கள் ஒவொன்றும் தங்களின் முகத்தில் அறைந்தது போல் உள்ளது எனக்கூறக் கேட்டிருக்கிறேன் .ஒருவேளை ஆணாய் பிறந்திருதால் அம்பையின் எழுத்தை இன்னும் அனுபவித்திருக்கலாமோ என்றே தோன்றியது .....
தன் எழுத்தை தானே விமர்சனம் செய்யும் ஒரே எழுத்தாளர் ,
வரலாறு படித்த பெண்ணிய எழுத்தாளர், பத்திரிகையாளர் , SPARROW அமைப்பின் இயக்குனர் , இயல் விருத்தாளர்...
[ அட இது விக்கிபீடியா அல்ல !!! ]
வாசிப்பு அனுபவம் :
மழையைக் கண்டு அதனூடே பயணித்து ஞாபகங்களின் நீட்சியில் மழை நின்றது கூட தெரியாமல் யாரோ வந்து தட்டி எழுப்பி மழ நின்ருச்சு ( கதை முடிந்ததது ) என்று கூறும் அதே அனுபவம் ....
வாசித்தால் புரியும் !!
- 🖋ஆ.திவ்ய பிரபா
பி.கு :
" நந்திமழைச் சாரலிலே ", "அந்தி மாலை ", " The Purple Sea " இன்னும் கிட்டவில்லை ....தேடுகிறேன் ... கிட்டினால் கூறுங்கள் ......


